போலியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!
 
                    30 ஐப்பசி 2025 வியாழன் 18:05 | பார்வைகள் : 189
சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பான நிதி மோசடி சம்பவங்கள் குறித்து பணியகத்திற்கு கிடைக்கும் முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
இந்த விளம்பரங்களில் பெரும்பாலானவை போலியானவை என்றும், அவை பணியகத்திடமிருந்து ஒப்புதல் பெறவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனவே, வெளிநாட்டு வேலை தேடுபவர்கள், அத்தகைய வேலைகளை வழங்கும் நிறுவனம் பணியகத்தின் செல்லுபடியாகும் உரிமத்துடன் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும், வேலை வாய்ப்பு பணியகத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதையும், பணம் செலுத்துவதற்கு முன்பு அல்லது பயண ஆவணங்களை ஒப்படைப்பதற்கு முன்பு சரிபார்க்க வேண்டும் என்று SLBFE கேட்டுக்கொள்கிறது.
மேலும், மோசடி நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் பற்றிய தகவல் யாரிடமாவது இருந்தால், 0112882228 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 1989 என்ற துரித எண் மூலமாகவோ சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பிரிவுக்குத் தெரிவிக்குமாறு SLBFE கேட்டுக்கொள்கிறது.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மொத்தம் 3,253 இலங்கையர்கள் தென் கொரியாவிற்கு வேலைவாய்ப்புக்காகச் சென்றுள்ளதாகவும் SLBFE தெரிவித்துள்ளது.
உற்பத்தித் துறையில் பதவிகளைப் பெறுவதற்காக இரண்டு பெண்கள் உட்பட 72 தொழிலாளர்கள் குழு நேற்று (29) தென் கொரியாவுக்குப் புறப்பட்டது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் கொரியாவின் மனிதவள மேம்பாட்டு சேவை (HRD Korea) ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, இந்த வேலைவாய்ப்பு வாய்ப்புகள் E-9 விசா பிரிவின் கீழ் வழங்கப்படுகின்றன.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று






 ALARME 24 மணி நேர பாதுகாப்பு
        ALARME 24 மணி நேர பாதுகாப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan