Paristamil Navigation Paristamil advert login

லோகேஷ் கனகராஜ் ஜோடியாக நடிக்கிறாரா வாமிகா கபி?

லோகேஷ் கனகராஜ்  ஜோடியாக நடிக்கிறாரா வாமிகா கபி?

30 ஐப்பசி 2025 வியாழன் 16:36 | பார்வைகள் : 2112


தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில், லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த படம் கேங்ஸ்டர் ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகி வருவதுடன், தற்போது அதற்கான படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. வரும் ஜனவரி மாதத்திற்குள் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகி குறித்த விவரமும் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல பாலிவுட் நடிகை வாமிகா கபி இப்படத்தில் நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்