இலங்கையில் அதிகரித்த தங்கம் விலை பெருமளவில் குறைந்தது!

23 ஐப்பசி 2025 வியாழன் 15:53 | பார்வைகள் : 164
கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 77,000 ரூபாய் குறைந்துள்ள அதேவேளை, இன்று (23) மட்டும் 10,000 ரூபாய் குறைந்துள்ளது.
அதன்படி, இன்று (23) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 302,300 ரூபாயாக குறைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இதன் விலை 379,200 ரூபாயாக காணப்பட்டது.
இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை 410,000 ரூபாயாக இருந்த 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று 330,000 ரூபாயாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன