Paristamil Navigation Paristamil advert login

புதிய Vision Iconic கான்செப்ட் காரை அறிமுகப்படுத்திய Mercedes-Benz

புதிய Vision Iconic கான்செப்ட் காரை அறிமுகப்படுத்திய Mercedes-Benz

23 ஐப்பசி 2025 வியாழன் 07:53 | பார்வைகள் : 161


Mercedes-Benz நிறுவனம் தனது புதிய 'Vision Iconic' எனும் கான்செப்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த அதி நவீன எலெக்ட்ரிக் கார், 1930-களின் கலை மற்றும் வடிவமைப்பை நினைவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு, டிஜிட்டல் யுகத்தின் தேவைகளுக்கு ஏற்ப நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

“New Iconic Era” எனப்படும் புதிய யுகத்தின் தொடக்கத்தை இது குறிக்கிறது.

விஷன் ஐகானிக் காரின் வெளிப்புற வடிவமைப்பு, நீளமான மற்றும் ஓட்டம் கொண்ட அமைப்புடன், நேர்த்தியான கிரில் மற்றும் art-deco குறிப்புகள் கொண்டது.

300 SL போன்ற பழமையான மொடல்களின் அழகை நினைவுபடுத்தும் இந்த வடிவமைப்பு, எதிர்காலத்தின் நவீன தன்மையையும் பிரதிபலிக்கிறது.

இந்த காரின் முக்கிய அம்சமாக “Iconic Grille” உள்ளது. இது பழைய மெர்சிடீஸ் கிரிலை புதிய வடிவத்தில் மாற்றியமைத்ததாகும்.

Chrome மற்றும் smoked glass மூலம் சூழப்பட்ட இந்த கிரில், ஒளிரும் மூன்று முனை நட்சத்திரத்துடன், காருக்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகிறது.


உள் அமைப்பில், “Zeppelin” எனப்படும் மிதக்கும் கட்டமைப்பு டாஷ்போர்டில் மையமாக உள்ளது.  

இது analog மற்றும் digital தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆழமான நீல வெல்வெட், உலோக அலங்காரங்கள் மற்றும் முத்து அலங்காரங்கள் கொண்ட உள்ளமைப்பு, 20-ஆம் நூற்றாண்டின் கலை நயத்தை பிரதிபலிக்கிறது.

AI தொழில்நுட்பம் கொண்ட “brand clock” காரின் தனிப்பட்ட உதவியாளராக செயல்படுகிறது.

மெர்சிடீஸ்-பென்ஸ், கலை, பாரம்பரியம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக இந்த மொடலை உருவாக்கியுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்