மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினி!
22 ஐப்பசி 2025 புதன் 14:05 | பார்வைகள் : 729
இயக்குனர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அடுத்தது இவரது இயக்கத்தில் உருவாகி இருந்த ‘பைசன்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது.
இந்த படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, அமீர் மற்றும் பலர் நடித்திருந்தனர். பா. ரஞ்சித் இந்த படத்தை தயாரித்திருந்தார். நிவாஸ் கே பிரசன்னா இதற்கு இசை அமைத்திருந்தார். கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பினாலும் இப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பைசன் படத்துக்காக மாரி செல்வராஜை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ரஜினி தன்னை, “சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன் படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது மாரி வாழ்த்துக்கள்” என்று வாழ்த்தியதாக பதிவிட்டுள்ளார்.
மேலும் “பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் காளமாடன் படத்தையும் பார்த்துவிட்டு என்னையும், ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan