இலங்கையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதி

22 ஐப்பசி 2025 புதன் 09:52 | பார்வைகள் : 1131
“மிதிகம லசா” என அழைக்கப்படும் வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர ஹேவத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.
“மிதிகம லசா” வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் இருக்கும் போது மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர், அவர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த “மிதிகம லசா” சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.