உடல் எடை குறைப்பின் போது செய்யும் தவறுகள் பற்றி தெரியுமா ?
21 ஐப்பசி 2025 செவ்வாய் 11:26 | பார்வைகள் : 1023
நம்மில் பலருக்கும் உடல் எடை குறைக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அதில் நம்மையே அறியாமல் நிறைய தவறு செய்வோம். அப்படி நாம் செய்யும் தவறு என்ன? செய்யவே கூடாத அந்த விஷயங்கள் என்னென்ன? பார்க்கலாம்…
உணவில் புரதம் சேர்த்துக்கொள்ளாமை மிக முக்கிய தவறு. புரதம் பசியை போக்குவதுடன், உடலின் உட்கரிக்கும் திறனை உயர்த்தும். இதனால் மேற்கொண்டு எடை கூடுவது தடுக்கப்படும்
போதியளவு நார்ச்சத்து எடுத்துக்கொள்ளாதது முக்கிய தவறு. நார்ச்சத்துக்கள்தான் செரிமானத்துக்கும், பசி போவதற்கும் உதவும். எனவே நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம
காலை உணவை தவிர்க்கக்கூடாது. மீறி அதை தவிர்ப்பது, அதீத பசியை தூண்டி மதிய உணவின் அளவை அதிகரிக்கச் செய்யும். மட்டுமன்றி செரிமானத்திலும், உடலின் உட்கரிக்கும் திறனிலும், ஆற்றலிலும், ரத்த சர்க்கரை அளவிலும் சீரற்ற நிலை ஏற்படும்
ரத்த சர்க்கரை அளவில் கவனமின்றி இருப்பது தவறு. அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, கொழுப்புச் சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது, கிரேவிங்ஸ் அதிகம் வருவது போன்ற நேரங்களில் எடுத்துக் கொள்ளும் சமச்சீரற்ற உணவு ரத்த சர்க்கரையில் பாதிப்பை ஏற்படுத்தி உடல் எடையை குறையவிடாமல் வைக்கும்.
போதிய நேரம் தூக்கமில்லாமல் இருப்பதும் தவறு. இது ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தி, பசியின்மை / அதீத பசி, ஆற்றலின்மை, உடல் சோர்வுக்கு வழிவகுக்கும் என்பதால் தினமும் 6 - 8 மணி நேர உறக்கம் அவசியம்
முறையாக உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, தசையிழப்பு - சோர்வு - உடல் அழுத்தம் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். எடை குறைப்புக்காக உடற்பயிற்சி செய்வோர், முறையாக உடற்பயிற்சி ஆலோசனை பெற்று செய்து வரவும்
அடிக்கடி சாப்பிடுவது, நிறைய கலோரி உட்கொள்வது போன்றவை பசியை தூண்டி அதீத உணவு சாப்பிட வழிவகுக்கும். எனவே மனம் நிறைய அளவான உணவை மட்டும் சாப்பிட்டு வரவும்
மன அழுத்தத்துடன் இருப்பது, உடல் எடையை குறையவிடாது. ஆகவே தினமும் யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவை செய்துவரவும்


























Bons Plans
Annuaire
Scan