Paristamil Navigation Paristamil advert login

சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள வித்தியாசமான தீபாவளி வாழ்த்து வைரல்

சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள வித்தியாசமான தீபாவளி வாழ்த்து வைரல்

20 ஐப்பசி 2025 திங்கள் 07:59 | பார்வைகள் : 138


கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள வித்தியாசமான தீபாவளி வாழ்த்துச் செய்தி வைரலாகியுள்ளது!

சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக் கூறியுள்ள சுந்தர் பிச்சை, ஒரு வித்தியாசமான புகைப்படத்தை தன் வாழ்த்துடன் இணைத்துள்ளார்.

அந்த புகைப்படத்தில், பூக்கள் மற்றும் தீபங்களுக்கு நடுவே ஒரு தட்டில் பர்ஃபி என்னும் இனிப்பு வைக்கப்பட்டுள்ளது.

அந்த புகைப்படத்துடன், ‘எங்கள் வீட்டில் இப்படி மட்டும்தான் பர்ஃபியை பரிமாறுவோம்’ என வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார் சுந்தர் பிச்சை.

விடயம் என்னவென்றால், கூகுள் லோகோவில் இருப்பதுபோல, சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீல நிறங்களிலான பர்ஃபி, கூகுள் லோகோவைப்போலவே தட்டில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

சற்று முன் வெளியிடப்பட்ட இந்த செய்தி வைரலாகிவருவதுடன், ஏராளம் மக்களும் சுந்தர் பிச்சைக்கு தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகிறார்கள்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்