கொழும்பு துறைமுக வளாகத்தில் மனித புதைகுழிகள் - நீதி அமைச்சுக்கு அனுப்பப்பட்ட கடிதம்
24 கார்த்திகை 2025 திங்கள் 12:23 | பார்வைகள் : 147
கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் மேலும் விபரமறிய பல்வேறு கேள்விகளை உள்ளடக்கி நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் செயலாளருக்கு மக்கள் போராட்ட முன்னணி கடிதமொன்றை இன்று திங்கட்கிழமை (24) அனுப்பியுள்ளது.
மக்கள் போராட்ட முன்னணி அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
இதுவரை எத்தனை மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன ? தொடர்பாக தடயவியல் பரிசோதனைகள் நடத்தப்பட்டதா? அப்படியானால் அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் என்னென்ன?
போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ள அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
துறைமுக வளாகத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட கூட்டு மனித புதைக்குழி தொடர்பான பின்வரும் கேள்விகளுக்கு மக்கள் போராட்ட முன்னணி பதில்களை எதிர்பார்க்கிறது.
இதுவரை எத்தனை மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?
இதுவரை தோண்டி முடிக்கப்பட்ட மொத்த நிலப்பரப்பில், எந்தளவு பாரிய புதைகுழிகளுக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது?3. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கைகள் மற்றும் ஊடக வெளியீடுகள் எவை?
4. இது தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன? மேலும் இது தொடர்புடைய காலக்கெடு மற்றும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் எவை? தனிநபர்கள் யாவர்?
5. இதற்கான காலக்கணிப்புக்காக (கார்பன் 14 சோதனைகள் போன்றவை) மாதிரிகள் சிறப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா? அப்படியானால், அந்த நிறுவனங்கள் எவை? மேலும், அந்த அறிக்கைகள் கிடைக்கப்பெறும் திகதிகளைக் குறிப்பிட முடியும?
இது தொடர்பாக தடயவியல் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டதா? அப்படியானால் அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் யாவை?
7. இது தொடர்பாக ஒரு இடைக்கால நீதி செயலமுறை திட்டமிடப்பட்டிருந்தால், அது எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பதை விளக்க முடியுமா?
8. மனித எலும்புக்கூடுகள் தவிர வேறு ஏதேனும் சான்றுகள் (கலைப்பொருட்கள், அணிகலனகள் ஆடைகள் போன்றவை) இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவா? அப்படியானால் அவை எவை?
9. காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு அந்த ஆதாரங்களை அடையாளம் காண வாய்ப்பு வழங்கப்படுமா?
குற்றவியல் அரசுகளின் அழிக்க முடியாத கரும்புள்ளிகளாகக் கருதப்படும் பல பாரிய மனிதப புதைகுழிகள் இலங்கையில் கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் அவற்றில் எதிலும் குறைந்தபட்ச நீதி அல்லது உரிய செயல்முறை மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக முந்தைய அரசாங்கங்கள் அந்த செயல்முறைகளை வேண்டுமென்றே புறக்கணித்து தாமதப்படுத்தியுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.
அந்த விசாரணைகள் அனைத்தும் மீண்டும் புத்துயிர் பெற்று பாரபட்சமின்றி முழு வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு / குறைந்தபட்சம் அவர்களின் உறவினர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இந்த செயல்முறை முடிவடைய வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
பல்வேறு காரணங்களால் ஏற்கனவே தாமதமாகி வரும் விசாரணை மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளை தாமதமின்றி முடிக்கவும் குற்றவாளிகளை அடையாளம் காண முடிந்தால் அவர்கள் மீது விரைவில் வழக்குத் தொடரவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan