கோஹ்லியின் சாதனையை சமன் செய்த பாபர் அஸாம்! இலங்கை அணிக்கு நெருக்கடி
24 கார்த்திகை 2025 திங்கள் 10:02 | பார்வைகள் : 132
முத்தரப்பு டி20 தொடரின் நேற்றையப் போட்டியில் பாகிஸ்தான் அணி 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.
பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் முத்தரப்பு தொடரின் 4வது டி20 போட்டி நடைபெற்றது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியில் சைம் அயூப் 13 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, சாஹிப்ஸதா பர்ஹான் (Sahibzada Farhan) மற்றும் பாபர் அஸாம் (Babar Azam) கூட்டணி அதிரடியில் மிரட்டியது. பர்ஹான் 41 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
இவர்களது கூட்டணி 74 ஓட்டங்கள் குவித்தது. ஜிம்பாப்வே பந்துவீச்சை அடித்து நொறுக்கிய பாபர் அஸாம் 52 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 74 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ஓட்டங்கள் குவித்தது. ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ரஸா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 19 ஓவர்களில் 126 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ரியான் பர்ல் (Ryan Burl) ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்கள் விளாசினார்.
பாகிஸ்தானின் உஸ்மான் தாரிக் 4 விக்கெட்டுகளும், மொஹம்மது நவாஸ் 2 விக்கெட்டுகளும், நசீம், வாசிம் மற்றும் அஷ்ரப் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பாபர் அஸாம் தனது 38வது டி20 அரைசதத்தை விளாசியதன் மூலம் விராட் கோஹ்லியின் (Virat Kohli) சாதனையை சமன் செய்தார். இருவரும் டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் விளாசியுள்ளனர்.
இந்தத் தொடரில் இலங்கை அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்றுள்ளது. ஆகையால், எஞ்சிய 2 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இலங்கைக்கு உள்ளது.
ஒருவேளை ஜிம்பாப்வேயை வீழ்த்தி, அடுத்தப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியுற்றாலும் இறுதிப்போட்டிக்கு செல்ல ரன்ரேட் முக்கியம் ஆகும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan