ஜேசன் சஞ்சயை அசைக்க முடியாமல் திணறும் திரையுலகம்
23 கார்த்திகை 2025 ஞாயிறு 14:00 | பார்வைகள் : 233
விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் சிக்மா. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்சன் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் இணைந்து ஃபரியா அப்துல்லா, அன்பு தாசன், சம்பத் ராஜ் ,மகாலட்சுமி சுதர்சனன், ராஜூ சுந்தரம் என பல பேர் நடித்துள்ளனர். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.
கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு என பழமொழிகளில் உருவாகும் இந்த படம் ஒரு பயம் இல்லாத சமூகத்தால் முழுமையாக புரிந்து கொள்ளப்படாத ஒருவன் தன் இலக்கை நோக்கி நகர்வதை பேசும் படமாக இருக்கும் என ஜேசன் சஞ்சய் ஒரு சமயம் கூறியிருந்தார். பரபரப்பான சினிமா அனுபவத்தையும் இந்த படம் கொடுக்கும் என்றும் கூறியிருந்தார்.
ஒரு பக்கம் தமனின் இசை இன்னொரு பக்கம் சந்தீப் கிஷனின் திறமையான நடிப்பு என கண்டிப்பாக இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு மறக்க முடியாத திரைப்படமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்ட நிலையில் ஒரே ஒரு பாடல் மட்டுமே படமாக்க வேண்டியதாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் ரிலீசுக்கு முன்பே இன்னொரு படத்தையும் இயக்கக்கூடிய வாய்ப்பு ஜேசன் சஞ்சய்க்கு வந்திருக்கிறது.
அது மட்டுமல்ல அந்தப் படத்தில் அவரை நடிக்க வைக்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது. ஜேசன் சஞ்சயை பொறுத்த வரைக்கும் அவர் இயக்குனராக அடியெடுத்து வைப்பதற்கு முன்பே பல நிறுவனங்கள் அவரை ஹீரோவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். விஜயிடமும் அதை கூறினார்கள். ஆனால் விஜய் இது அவனுடைய விருப்பம், அவனிடமே கேளுங்கள் என்று விலகிக் கொண்டார்.
சுதா கொங்கரா ஜேசன் சஞ்சையை ஹீரோவாக அறிமுகமாக்க எவ்வளவோ முயற்சிகள் எடுத்தார். ஆனால் ஜேசன் சஞ்சயை பொருத்தவரைக்கும் நடிக்க கொஞ்சம் கூட அவருக்கு விருப்பமில்லை என்பதுதான் உண்மை. இன்று வரை அதே மனநிலையில் தான் இருக்கிறார். அதனால் இப்போதைக்கு அவர் நடிகராக மாட்டார் என்பது இதன் மூலம் தெரிகிறது. இன்னொரு பக்கம் சிக்மா படம் ரிலீஸ் ஆன பிறகே இன்னொரு படத்தை இயக்குவார். அதற்கு முன்பு வேறு எந்த படத்திலும் கமிட்டாக மாட்டார் என்ற மனநிலையிலும் அவர் உறுதியாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan