இலங்கையை உலுக்கிய கோர சம்பவம் - 5 பேர் பலி
22 கார்த்திகை 2025 சனி 14:26 | பார்வைகள் : 137
கண்டி - கடுகண்ணாவை பிரதேசத்தில் வீடு மற்றும் கடையொன்றின் மீது பாரிய கல்லுடன், மண்மேடு சரிந்து விழுந்ததில் இதுவரையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (22) காலை இடம்பெற்றுள்ளது.
வீட்டிலிருந்தவர்களும் கடையில் இருந்தவர்களும் பாறைக்கு அடியில் சிக்கிய நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மண்சரிவில் சிக்கியுள்ள ஏனையவர்களையும் மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக பாரிய கல்லுடன் மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan