சாய் பல்லவி மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா ?
22 கார்த்திகை 2025 சனி 14:49 | பார்வைகள் : 124
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, ஹிந்தி சினிமாவிலும் மணிரத்னம் இயக்கும் படம் என்றால் நடிப்பதற்கு பலரும் தயாராக இருப்பார்கள். ஆனால், அவரது படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை சாய் பல்லவி மறுத்துவிட்டார் என்ற தகவல் ஒன்று கோலிவுட்டில் சுற்றி வருகிறது. 'தக் லைப்' படத்தை அடுத்து மணிரத்னம் புதிய படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் இருந்து வருகிறார்.
அப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதி நடிக்க சம்மதித்துள்ளதாகச் சொல்கிறார்கள். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவியை நடிக்க வைக்க அவரை அணுகியுள்ளார்கள். பொதுவாக மணிரத்னம் அவரது அலுவலகத்திற்குத்தான் நடிகர்கள், நடிகைகளை அழைத்து கதை சொல்லுவார். ஆனால், சாய் பல்லவி அதற்கு சம்மதிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். இதனால், வேறு ஒருவரை அனுப்பி சாய் பல்லவியிடம் கதை சொல்ல வைத்திருக்கிறார்கள். கதையைக் கேட்ட சாய் பல்லவி, படத்தில் அக்கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை என்று சொல்லி நடிக்க மறுத்துவிட்டாராம்.
இப்படி சுற்றி வரும் தகவல் உண்மையா என்பது ஆச்சரியமாகவே உள்ளது. கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஷாரூக்கான் என சீனியர் நடிகர்கள் மணிரத்னம் அழைத்தாலே போய்ச் சென்று பார்ப்பார்கள். அப்படியிருக்க சாய் பல்லவி அதை பாலோ செய்யாமல் இருப்பாரா என்றும் கோலிவுட்டில் கேள்வி எழுப்புகிறார்கள்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan