Paristamil Navigation Paristamil advert login

உலகின் சோம்பேறி மனிதனுக்கான போட்டியில் வென்ற நபர் ரூ37,000 பரிசு பெற்றுள்ளார்.

உலகின் சோம்பேறி மனிதனுக்கான போட்டியில் வென்ற நபர் ரூ37,000  பரிசு பெற்றுள்ளார்.

22 கார்த்திகை 2025 சனி 10:27 | பார்வைகள் : 125


உலகின் சோம்பேறி மனிதனுக்கான போட்டி - படுத்திருந்தே ரூ37,000 பரிசு வென்ற நபரஉலகின் சோம்பேறி மனிதன் என்ற பட்டத்திற்கான போட்டி சீனாவின் மங்கோலியாவில் உள்ள பாடோவில் கடந்த நவம்பர் 15 ஆம் திகதி நடைபெற்றது.

காலை 10:18 மணிக்குத் தொடங்கிய இந்த போட்டி, மறுநாள் 19:53 மணி வரை 33 மணி நேரம் 35 நிமிடங்களுக்கு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட 240 போட்டியாளர்களுக்கு மெத்தை வழங்கப்பட்டது.

இதில், போட்டியாளர்கள் படுக்கையில் படுத்துக்கொண்டே செல்போன் பயன்படுத்தவும், புத்தகங்கள் பயன்படுத்தவும், தங்களுக்கு தேவையானதை ஆர்டர் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், எழுந்து உட்காரவோ, படுக்கையை விட்டு வெளியேறவோ, கழிப்பறைக்கு செல்லவோ கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. போட்டியாளர்கள் பலரும் இதன் காரணமாக டயப்பர் பயன்படுத்தினர்.

ஆனால் முதல் 24 மணி நேரத்தில் 186 போட்டியாளர்கள் வெளியேற, 54 பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

33 மணி நேரம் 35 நிமிடங்கள் படுக்கையில் படுத்திருந்து உலகின் சோம்பேறி மனிதர் என்ற பட்டம் வென்றவருக்கு 3000 யுவான்(இந்திய மதிப்பில் ரூ.37,488) பரிசு வழங்கப்பட்டது.  

 

 

 

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்