ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை - சூப்பர் ஓவரில் வைடு மூலம் இந்தியாவை வென்ற வங்கதேசம்
22 கார்த்திகை 2025 சனி 10:27 | பார்வைகள் : 123
சூப்பர் ஓவரில் இந்தியா வீசிய வைடு மூலம் வங்கதேசம் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது.
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை நவம்பர் 14 ஆம் திகதி தொடங்கி வரும் நவம்பர் 23 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
அரையிறுதி போட்டியில் இந்தியா ஏ மற்றும் வங்கதேச ஏ அணிகள் மோதியது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய வங்கதேச ஏ அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹபிபுர் ரஹ்மான் சோஹன் 65 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
195 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய ஏ அணியும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 194 ஓட்டங்கள் குவிந்தது.
இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றதில் முதலில் இந்திய அணி துடுப்பாட்டம் ஆடிய நிலையில், அணித்தலைவர் ஜிதேஷ் சர்மாவும், அசுதோஷ் சர்மாவும் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் முதல் 2 பந்துகளில் அடுத்தடுத்து டக் அவுட் ஆகினர்.
1 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச ஏ அணி, சுயஸ் சர்மா முதல் பந்தில் y யஷிர் அலி ஆட்டமழக்க, 2வது பந்தை வைடு வீசி அதன் மூலம் ஒரு ஓட்டம் பெற்று வெற்றி பெற்றது.
இதன் மூலம், வங்கதேச அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான 2வது அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி, நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ளும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan