இலங்கை பணவீக்கம் மேலும் உயர்வு
21 கார்த்திகை 2025 வெள்ளி 16:31 | பார்வைகள் : 428
தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (NCPI) தகவலின்படி, நாட்டின் பிரதான பணவீக்கம் 2025 ஒக்டோபரில் 2.7% ஆக அதிகரித்துள்ளது என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கை தெரிவிக்கின்றது.
கடந்த செப்டெம்பர் நாட்டின் பிரதான பணவீக்கம் 2.1% ஆக காணப்பட்டிருந்தது.
அதேநேரம், 2025 செப்டம்பரில் 3.8% ஆக இருந்த உணவுப் பணவீக்கம், ஒக்டோபரில் 4.1% ஆக அதிகரித்தது.
மேலும், 2025 செப்டம்பரில் 0.7% ஆக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் ஒக்டோபரில் 1.5% ஆக அதிகரித்தது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan