Paristamil Navigation Paristamil advert login

தலைவர் 173’ படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவா?

தலைவர் 173’ படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவா?

21 கார்த்திகை 2025 வெள்ளி 10:57 | பார்வைகள் : 262


தமிழ் சினிமாவில் இரு பெரும் நடிப்பு ஜாம்பவான்களாக வலம் வருபவர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினி. இவர்கள் இருவரும் இணைந்து பல வருடங்கள் கழித்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அதேசமயம் ரஜினியின் 173-வது படத்தை, அதாவது தற்காலிகமாக தலைவர் 173 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்தை கமல்ஹாசன் தயாரிக்கப்போகிறார்

!ஆரம்பத்தில் இந்த படத்தை சுந்தர்.சி இயக்க உள்ளார் என அறிவிப்பு வெளியான நிலையில், ஒரு சில நாட்களிலேயே சுந்தர்.சி அந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்தார். எனவே ‘தலைவர் 173’ படத்தை யார் இயக்கப் போகிறார்? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளது. அதன்படி பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இருப்பினும் இனிவரும் நாட்களில் ‘தலைவர் 173’ படத்தின் இயக்குனர் குறித்த உறுதியான அப்டேட் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இந்த படத்தின் இசையமைப்பாளர் யாராக இருக்கும்? என்று பலரும் விவாதித்து வருகின்றனர் அந்த வகையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசனிடம், ‘தலைவர் 173’ படத்தில் இளையராஜா இணைவாரா? என்பது போன்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கமல்ஹாசன், “அது (ரஜினி) அவருடைய படம். நான் மட்டும் இதில் முடிவெடுக்க முடியாது. இருவரும் இணைந்து தான் முடிவெடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்