Paristamil Navigation Paristamil advert login

AI கருவிகளை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் - சுந்தர் பிச்சை எச்சரிக்கை

 AI கருவிகளை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் - சுந்தர் பிச்சை எச்சரிக்கை

20 கார்த்திகை 2025 வியாழன் 11:54 | பார்வைகள் : 144


Google-ன் தாய் நிறுவனமான Alphabet-ன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு கருவிகளை (AI Tools) மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக்கூடாது” என்று எச்சரித்துள்ளார்.

சுந்தர் பிச்சை BBC-க்கு அளித்த பேட்டியில், “தற்போதைய AI தொழில்நுட்பம் சில பிழைகளுக்கு உட்பட்டது. மக்கள், இந்த கருவிகளை சரியான பயன்பாட்டிற்காக பயன்படுத்த வேண்டும். ஆனால், அவை சொல்வதனை முழுமையாக நம்புவது ஆபத்தானது” எனக் கூறியுள்ளார்.

அவர் மேலும், “AI கருவிகள் படைப்பாற்றலுடன் எழுதுவதற்கு உதவலாம். ஆனால், அவற்றின் எல்லைகளை புரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், "Alphabet, மிகுந்த துல்லியமான தகவல்களை வழங்க முயற்சி செய்கிறது. இருந்தாலும், அதிநவீன AI தொழில்நுட்பம் கூட சில தவறுகளைச் செய்யக்கூடும்” என தெரிவித்துள்ளார்.

AI துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முதலீடுகள் குறித்து பேசிய சுந்தர் பிச்சை, “இணையத்தின் ஆரம்ப காலத்தைப் போல, இப்போது AI-யிலும் அதிகப்படியான முதலீடுகள் நடக்கின்றன. இதில் பகுத்தறிவு இருக்கிறது, அதேசமயம் அபரிமிதமான எதிர்பார்ப்புகளும் உள்ளன” எனக் கூறியுள்ளார்.

“AI bubble உடைந்தால், எந்த நிறுவனமும் அதிலிருந்து தப்பிக்க முடியாது. Google கூட பாதிக்கப்படும். ஆனால், இணையம் போலவே, AI-யும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்” என அவர் எச்சரித்துள்ளார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்