கிரிக்கெட் வரலாற்றில் புதிய ஷாய் ஹோப்
20 கார்த்திகை 2025 வியாழன் 11:54 | பார்வைகள் : 125
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத சாதனையை ஷாய் ஹோப் படைத்துள்ளார்.
நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
மழை காரணமாக போட்டி 34 ஓவர்களாக குறைக்கப்பட்டதில், மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ஓட்டங்கள் குவித்தது.
248 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாட்டம் ஆடிய நியூசிலாந்து அணி, 33.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 248 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதில் மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஷாய் ஹோப், அதிரடியாக ஆடி 69 பந்துகளில் 109 ஓட்டங்கள் குவித்தார்.
இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத சாதனையை ஷாய் ஹோப் படைத்ததுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் 12 நாடுகளில், 11 அணிகளுக்கு எதிராகவும் சதம் அடித்துள்ள முதல் வீரர் என்ற பெருமையை ஷாய் ஹோப் படைத்துள்ளார்.
முன்னதாக ராகுல் டிராவிட், அவருடைய காலத்தில், 11 டெஸ்ட் அணிகள் இருந்த நிலையில், 10 அணிகளுக்கு எதிராக சதமடித்திருந்தார்.
டிராவிட் ஓய்வு பெற்ற பிறகு 2017 ஆம் ஆண்டிலே ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்றது.
சச்சின் 9 அணிகளுக்கு சதமடித்திருந்தார். விராட் கோலி அயர்லாந்திற்கு எதிராக சதமடித்ததில்லை.
இதன் மூலம் 19வது சதத்தை அடித்த ஷாய் ஹோப், லாராவின் சாதனையை சமன் செய்து 2வது அதிக சதமடித்த மேற்கிந்திய தீவுகள் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 25 சதங்களுடன் கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார்.
மேலும், 6,000 ஓட்டங்களை கடந்த 7வது மேற்கிந்திய தீவுகள் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan