Paristamil Navigation Paristamil advert login

குறைபாடுகளையும் கலையாக மாற்றும் அசாத்திய சீன கலைஞர்

 குறைபாடுகளையும் கலையாக மாற்றும் அசாத்திய  சீன கலைஞர்

17 கார்த்திகை 2025 திங்கள் 18:28 | பார்வைகள் : 173


டாங் ஜிக்ஸி என்ற ஒரு சீன தெருக் கலைஞர், அவர் நகரச் சுவர்களில் உள்ள விரிசல்கள், புல் மற்றும் தாவரங்களை தனது விளையாட்டுத்தனமான கலைப்படைப்புகளின் பகுதிகளாக மாற்றும் வியக்க வைக்கும் காணொளியொன்று இணையத்தில் லட்சக்கணக்கான லைக்குகளை குவித்து வருகின்றது.

பொதுவாகவே ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் ஒரு தனித்துவமான திறமையாவது நிச்சயம் இருக்கும்.ஆனால் சிலரால் மட்டுமே அதனை சரியாக கண்டறிந்து அதில் சாதிக்க முடிகின்றது.

அந்தவகையில், டாங் ஜிக்ஸி என்ற ஒரு சீன தெருக் கலைஞரின் அபரிமிதமாக கற்பனை திறன் மற்றும் படைப்பாற்றல் என்பன சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபல்யம் என்றால் மிகையாகாது.இவரின் சிறப்பம்சமே குறைப்பாடுகளையும் கலையாக மாற்றும் இவரின் அழகிய எண்ணங்கள் தான்.

குறித்த நபர் துடிப்பான வண்ணங்கள் மற்றும் நுணுக்கமான விவரங்களைப் பயன்படுத்தி, உடைந்த சுவர்கள் மற்றும் நடைபாதைகளை விசித்திரமான உலகங்களாக மாற்றுகிறார் இவரின் அசாத்திய கலை திறமை பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கும் கவையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  
 

வர்த்தக‌ விளம்பரங்கள்