Paristamil Navigation Paristamil advert login

100 ரஃபேல் போர் விமானங்களை உக்ரைனுக்கு விற்பனை செய்யும் பிரான்ஸ்!!

100 ரஃபேல் போர் விமானங்களை உக்ரைனுக்கு விற்பனை செய்யும் பிரான்ஸ்!!

17 கார்த்திகை 2025 திங்கள் 13:48 | பார்வைகள் : 516


ஜனாதிபதி இம்னுவல் மக்ரோன் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பரிசில் சந்தித்து, அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 100 ரஃபேல் போர்விமானங்கள், புதிய தலைமுறை SAMP-T வான்வழி பாதுகாப்பு அமைப்புகள், ராடார்கள் மற்றும் ட்ரோன்கள் போன்ற பிரான்ஸ் தயாரிப்பு பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவதற்கான கருத்தறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். 

இது உக்ரைனின் வான்வழி பாதுகாப்பை வலுப்படுத்தும் « வரலாற்று சிறப்பு மிக்க » ஒப்பந்தம் என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். முன்பு பிரான்ஸ் மிராஜ் விமானங்களை வழங்கியிருந்தாலும், ரஃபேல் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்நேரத்தில், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்கள் நடாத்துவதால் இன்னொரு கடினமான குளிர்காலத்தை எதிர்கொள்கிறது; கார்கிவ் பகுதியில் சமீபத்திய தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் ஊழல் சர்ச்சை இரண்டு அமைச்சர்களின் ராஜினாமாவிற்கும், ஜெலென்ஸ்கி தனது நெருங்கிய ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கும் வழிவகுத்துள்ளது. 

இதையடுத்து, உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் செயல்முறையில் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு மிக முக்கியம் என பிரான்ஸ் அரசும் வலியுறுத்தியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்