Paristamil Navigation Paristamil advert login

இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்

இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்

17 கார்த்திகை 2025 திங்கள் 09:43 | பார்வைகள் : 404


இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி தொடரை முழுமையாக கைப்பற்றியது.


பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடந்தது.

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியது. பதும் நிசங்கா 24 ஓட்டங்களும், கமில் மிஷாரா 29 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த குசால் மெண்டிஸ் 34 ஓட்டங்களிலும், கமிந்து மெண்டிஸ் 10 ஓட்டங்களிலும் அவுட் ஆகி வெளியேறினர்.

அப்போது இலங்கை அணி 26 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 123 ஓட்டங்கள் என்ற நிலையில் இருந்தது.

அதன் பின்னர் பாகிஸ்தானின் மிரட்டலான பந்துவீச்சில் அடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் இலங்கை அணி 45.2 ஓவரில் 211 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

அதிகபட்சமாக சமரவிக்ரமா 48 ஓட்டங்களும், பவன் ரத்னயாகே 32 ஓட்டங்களும் எடுத்தனர். முகமது வாசிம் 3 விக்கெட்டுகளும், ஃபைசல் அக்ரம் மற்றும் ஹாரிஸ் ராஃப் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் 44.4 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மொஹம்மது ரிஸ்வான் (Mohammad Rizwan) 61 ஓட்டங்களும், ஃபஹர் ஜமான் 55 ஓட்டங்களும், ஹுசைன் தலத் 42 ஓட்டங்களும் எடுத்தனர். இலங்கையின் ஜெஃப்ரே வாண்டர்சே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்