Paristamil Navigation Paristamil advert login

பரிசில் மீண்டும் கொள்ளை முயற்சி!!

பரிசில் மீண்டும் கொள்ளை முயற்சி!!

16 கார்த்திகை 2025 ஞாயிறு 11:15 | பார்வைகள் : 505


விலையுயர்ந்த பொருட்களை விற்பனை செய்யும் Chanel  காட்சியறையை கொள்ளையிடும் முயற்சி ஒன்று பரிசில் இடம்பெற்றுள்ளது.

நவம்பர் 15, நேற்று சனிக்கிழமை காலை இச்சம்பவம் Avenue Montaigne வீதியில் உள்ள ‘’சனல்’ காட்சியறையில் இடம்பெற்றது. ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் இருவர், ஸ்கூட்டர் ஒன்றில் வருகை தந்து காட்சியறையின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே நுழைய முற்பட்டனர். ஆனால் அதற்கிடையில் பாதுகாவலர் காவல்துறையினருக்கு எச்சரித்தார்.

கொள்ளையர்கள் காவலாளியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டனர். அவர்ளது கொள்ளை முயற்சி பாதியில் முடிந்தது.

அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்த ஸ்கூட்டரில் பயணித்ததாகவும், அவர்கள் தேடப்பட்டு வருவதாகவும்  விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்