Paristamil Navigation Paristamil advert login

மகளிர் எமர்ஜிங் நேஷனல் ட்ராபி - அறிவித்த ஐசிசி

மகளிர் எமர்ஜிங் நேஷனல் ட்ராபி - அறிவித்த ஐசிசி

16 கார்த்திகை 2025 ஞாயிறு 10:04 | பார்வைகள் : 120


சமீபத்தில் நடந்து முடிந்த 2025 மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

இந்த போட்டிகளை 500 மில்லியன் பேர் தொலைக்காட்சி மற்றும் இணையம் மூலம் பார்வையிட்டதாகவும், 3,00,000 பேர் நேரில் பார்வையிட்டதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

மேலும், மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில், மகளிர் எமர்ஜிங் நேஷனல் ட்ராபி என்ற தொடரை அறிவித்துள்ளது.

இந்த தொடரானது வரும் நவம்பர் 20 ஆம் திகதி முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரை தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடைபெற உள்ளது.

இந்த தொடரானது T20 வடிவத்தில் நடைபெற உள்ளது.

தாய்லாந்து, நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து, நமீபியா, தான்சானியா மற்றும் உகாண்டா ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்