Paristamil Navigation Paristamil advert login

பத்திரனா உட்பட விலையுயர்ந்த வீரர்களை கழற்றிவிட்ட அணிகள்

பத்திரனா உட்பட விலையுயர்ந்த வீரர்களை கழற்றிவிட்ட அணிகள்

16 கார்த்திகை 2025 ஞாயிறு 10:04 | பார்வைகள் : 128


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான மதீஷா பத்திரனா (Matheesha Pathirana) விடுவிக்கப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.13 கோடிக்கு விடுவிக்கப்பட்ட பத்திரனா, டெத் ஓவர்களில் மிரட்டலாக பந்துவீசக்கூடியவர் ஆவார். அத்துடன் சென்னை அணியின் பல வெற்றிகளுக்கு இவர் முக்கிய காரணமாக அமைந்துள்ளார்.

இவர் 32 ஐபிஎல் போட்டிகளில் 47 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இவரது சிறந்த பந்துவீச்சு 4/28 ஆகும்.

கில்லர் மில்லர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் டேவிட் மில்லரை (David Miller) லக்னோ அணி ரூ.7.50 கோடிக்கு விடுவித்துள்ளது.

இதற்கு காரணம் சிறந்த ஃபினிஷரான மில்லர், கடந்த சீசனில் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார்.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மில்லர், 141 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 13 அரைசதங்களுடன் 3077 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பகமான தொடக்க வீரராக இருந்தவர் டெவோன் கான்வே (Devon Conway).

ஆனால், கடந்த சீசனில் நீண்ட காயம் காரணமாக குறைவான போட்டிகளிலேயே விளையாடினார். அதிலும் கூட அவர் பெரிதாக சோபிக்கவில்லை.

எனவே சென்னை அணி அவரை ரூ.6.25 கோடிக்கு விடுவித்து, புதிய டாப் ஆர்டரை உருவாக்கும் முடிவை எடுத்துள்ளது.

இவர் 29 போட்டிகளில் விளையாடி, 11 அரைசதங்களுடன் 1080 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சம் 92 ஆகும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்