Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

13 கார்த்திகை 2025 வியாழன் 12:20 | பார்வைகள் : 1197


இலங்கையில் இன்றும் (13) தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக செட்டியார் தெரு தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக சந்தையில் தொடர்ந்தும் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக, இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய, கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 336,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அதேநேரம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 310,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வர்த்தக‌ விளம்பரங்கள்