பிரித்தானியா வயல்வெளியில் மனித உடலம் - 3 பேர் கைது
13 கார்த்திகை 2025 வியாழன் 06:25 | பார்வைகள் : 2273
பிரித்தானியாவின், இன்வெர்கிளைட் (Inverclyde) பகுதியில் வயல்வெளியில் மனித உடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிமாகோலம் (Kilmacolm) பகுதியில் உள்ள ஹை மாதர்னாக் பண்ணைக்கு அருகில் உள்ள வயல்வெளியில் இருந்து மனித உடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
கண்டெடுக்கப்பட்ட மனித உடலம் தொடர்பான அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், க்ரீனொக் (Greenock) பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை காணாமல் போன 50 வயது நபரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஸ்கொட்லாந்து காவல்துறையினர் 51, 45 மற்றும் 44 வயதுடைய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான விசாரணையை காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக நடத்தி வருவதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திரு. தேவராசா கணேசராசா
பிரான்ஸ், வட்டு வடக்கு சித்தன்கேணி (யாழ்ப்பாணம்)
வயது : 69
இறப்பு : 20 May 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan