Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

“பிரெஞ்சுகாரர்கள் சீனர்களைவிட மேல் அல்ல”: டிரம்ப் கடும் விமர்சனம்!!

“பிரெஞ்சுகாரர்கள் சீனர்களைவிட மேல் அல்ல”: டிரம்ப் கடும் விமர்சனம்!!

11 கார்த்திகை 2025 செவ்வாய் 15:01 | பார்வைகள் : 4734


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், Fox News சேனலில் அளித்த பேட்டியில் பிரான்சை கடுமையாக விமர்சித்துள்ளார். வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் படிப்பதற்கான அனுமதி குறித்து கேள்வி எழுப்பியபோது, டிரம்ப் “பிரெஞ்சுகாரர்கள் சீனர்களைவிட மேல் அல்ல” எனக் கூறியுள்ளார். 

அவர் பிரான்ஸ் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அநியாயமான 25% வரி விதித்ததாகவும், “பிரெஞ்சுகாரர்களுடன் நமக்கு நிறைய பிரச்சனைகள் இருந்தன” எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த கடுமையான விமர்சனம் பெரும்பாலும் பிரான்ஸ் GAFAM (Google, Apple, Facebook, Amazon, Microsoft) நிறுவனங்களுக்கு விதித்த டிஜிட்டல் வரியை நோக்கி இருந்தது. அமெரிக்க நிறுவனங்களுக்கு நன்மை அளிக்கும் பொருளாதாரத் திறப்பை ஆதரிக்கும் டிரம்ப், இதை இன்னும் மறக்கவில்லை.

இந்த கருத்துகள் “அமெரிக்காவை மீண்டும் சிறப்பாக்குவோம்” (Make America Great Again) இயக்கத்தில் உளாள இரண்டு மனோபாவங்களை வெளிப்படுத்துகின்றன.

ஒரு பக்கம், தொழில்நுட்ப துறையுடன் நெருக்கமுள்ளவர்கள் . அமெரிக்காவுக்கு வெளிநாட்டு திறமைகள் தேவை என்று நம்புகிறவர்கள்;  ஏனையவர்கள் குடியேற்றத்துக்கு எதிராக உள்ளனர். 

பேட்டியின் முடிவில் டிரம்ப், “MAGA எனது யோசனை, வேறு யாருடையதும் அல்ல. நமது நாடு செழிக்க வேண்டும் என்பதே MAGA வின் இலக்கு” என்று வலியுறுத்தியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்