Paristamil Navigation Paristamil advert login

ஜெனரால்-து கோல் மறைவின் 55-வது ஆண்டு நினைவு நிகழ்வு

ஜெனரால்-து கோல் மறைவின் 55-வது ஆண்டு நினைவு நிகழ்வு

9 கார்த்திகை 2025 ஞாயிறு 10:39 | பார்வைகள் : 509


இன்று நவம்பர் 9, 1970-ல் மறைந்த ஜெனரால் சார்ல்-து கோலின் (Général CHARLES DE GAULLE) 55-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, COLOMBEY-LES-DEUX-ÉGLISES நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

நினைவு நிகழ்வு நிரல்:

மதியம் 15:30: சார்ல்-து கோலின் நினைவு மையத்தில் கருத்தரங்கு
மாலை 17:45: தேவாலய வழிபாடு 
சார்ல்-து கோலின் கல்லறையில் மலர்வணக்கம்
Table du Général உணவகத்தில் உணவு விருந்து நடைபெறும்
பல அரசியல்வாதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு வணக்கம் செலுத்துகின்றனர்.

வரலாற்று பின்னணி:

1969-ல் பதவி விலகிய பிறகு து-கோல் இங்கே தான் தங்கியிருந்தார்
'சார்ள்-து-கோல் 1890-1970' என கல்லறையில் எளிய முறையில் வெட்டப்பட்டுள்ளது.
தனக்கு தேசிய இறுதி சடங்குகள் நடத்தப்பட வேண்டாம் என முன்னரே மறுத்துவிட்டார்

நினைவு மையம்:

ஆண்டுக்கு 100,000 பார்வையாளர்கள் இங்கு வருகின்றனர்.
அக்டோபர் 2008-ல் இது திறக்கப்பட்டது
து கோலின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளை இது அழகாகச் சித்தரிக்கின்னறது.

இந்த நிகழ்வு, பிரெஞ்சு வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் ஜெனரால் சார்ள்-து-கோலின் மரபைக் கௌரவிப்பதாகும்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்