ரஷ்யா அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்க வாய்ப்பு- புடின் உத்தரவு
6 கார்த்திகை 2025 வியாழன் 10:22 | பார்வைகள் : 270
புடின் உத்தரவு காரணமாக, ரஷ்யா அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நவம்பர் 5-ஆம் திகதி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், 1991-ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் கலைந்ததிலிருந்து நிறுத்தப்பட்டிருந்த அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்கும் வாய்ப்பை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்கும் திட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரெய் பெலோசோவ், “முழுமையான அணு சோதனைகளுக்குத் தயாராகுவது அவசியம்” என கூறியுள்ளார்.
புடின், ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் உளவுத்துறை உள்ளிட்ட பிரிவுகள் இணைந்து, அணு சோதனை தொடங்கும் முன் தேவையான தகவல்களை சேகரித்து, பாதுகாப்பு கவுன்சிலில் பரிசீலித்து, பரிந்துரைகளை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யாவின் Novaya Zemlya பகுதியில் உள்ள ஆர்க்டிக் சோதனை மையம், குறுகிய காலத்திலேயே சோதனைகளை நடத்த தயாராக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
21ஆம் நூற்றாண்டில் வட கொரியா தவிர எந்த நாடும் அணு வெடிப்பு சோதனைகளை மேற்கொள்ளவில்லை.
பாதுகாப்பு நிபுணர்கள், இந்த சோதனைகள் உலகளாவிய நிலைமையை மேலும் பதற்றமாக்கும் என எச்சரிக்கின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan