டொராண்டோவில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை
6 கார்த்திகை 2025 வியாழன் 10:22 | பார்வைகள் : 2952
டொராண்டோ நகரில் மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் இந்த சிறப்பு வானிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பின் படி, வடமேற்குத் திசையிலிருந்து மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்குக் காற்று இன்று பிற்பகல் ஒரு குளிர் முன்னிலை (cold front) கடக்கும் போது வடமேற்குக் காற்றாக மாறும் என வானிலை அறிவிப்பு கூறுகிறது.
இரவு நேரத்திற்குள் காற்று வீச்சு படிப்படியாக குறையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பலத்த காற்று காரணமாக மரக்கிளைகள் முறிவு, தளர்ந்த பொருட்கள் பறந்து செல்லுதல், மற்றும் மின்விநியோக பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
டொராண்டோவில் மழையுடன் அதிகபட்ச வெப்பநிலை 13 பாகை செல்சியஸாகவும், வியாழக்கிழமை சிறிய மழை வாய்ப்புடன் அதிகபட்சம் வெபப்நிலை 8 பாகை செல்சியஸ் வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan