மகளின் கனவை நிறைவேற்றிய இளையராஜா!
4 கார்த்திகை 2025 செவ்வாய் 09:50 | பார்வைகள் : 275
இதுவரை 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில்). 7,000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் இசைப்பாணியை கௌரவிக்கும் விதமாக 2010-ல் பத்மபூஷண் விருதும், 2018-ல் பத்மவிபூஷண் விருதும் இவருக்கு கிடைத்தது. மூன்று தேசிய திரைப்பட விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர்.
மேற்கு மற்றும் இந்திய சங்கீதத்தை இணைத்து “சிம்பொனி” வடிவில் இசையமைத்த முதல் இந்திய இசையமைப்பாளரும் இவரே. 70-ஸ் முதல் தற்போதைய 2k கிட்ஸ்களும் கொண்டாடும் இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜா, தற்போது தன்னுடைய மகள் நினைவாக சிறப்பான விஷயம் ஒன்றை செய்துள்ளார்.
இளையராஜாவின் ஒரே மகளான பவதாரிணி, புற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் உயிரிழந்தார். பாவதாரிணியின் இழப்பு இளையராஜாவை மட்டும் அல்ல அவருடைய ஒட்டு மொத்த குடும்பத்தையும் அதிகம் பாதித்தது. சில நிகழ்ச்சிகளில் இசைக்காகவே வாழ்ந்து விட்டதால் தன்னுடைய குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் சரியாக நேரம் செலவிட முடியவில்லை என வருத்தத்தை பதிவு செய்து வந்தார். அதே போல் தன்னுடைய மகளுக்கு பெண்களுக்காக ஆர்கெஸ்டரா ஒன்றை துவங்க வேண்டும் என்பது கனவு என்பதையும் கூறியுள்ளார்.
தற்போது இறந்த மகளின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா (Bavatha Girls Orchestra) என்கிற அமைப்பை துவங்கி உள்ளார். இதில் 15 வயதுக்குட்பட்டவர்களக்கான ஆர்கெஸ்ட்ரா ஆகும். அதற்காக திறமையுள்ள பெண் பாடகர்கள் இசைக் கலைஞர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் allgirlsorchestra@gmail.com என்கிற மெயிலுக்கு தங்களின் விபரங்களை அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜாவிடம் இருந்து இப்படி ஒரு வாய்ப்பு வந்துள்ளது இளம் கலைஞர்களுக்கு வர பிரசாதமாக அமைந்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan