பெரும் அரசாணையை வெளியிட்டஜனாதிபதி விளாடிமிர் புடின்
30 புரட்டாசி 2025 செவ்வாய் 10:59 | பார்வைகள் : 4029
உக்ரைனில் ரஷ்யா தனது கொடூர போரைத் தொடர்ந்து வரும் நிலையில், ஜனாதிபதி விளாடிமிர் புடின் பெரும் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மேலும் 135,000 பேர் இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரஷ்ய ஆதரவு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில்,
உக்ரைனில் போரை தொடர்ந்து முன்னெடுக்க மக்களிடமிருந்து அதிகமான வீரர்களை வரவழைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிராக வடகொரிய வீரர்கள் அதிக எண்ணிக்கையில் களமிறக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 135,000 ரஷ்யர்களை இராணுவத்தில் சேர்த்துள்ளனர்.
இதற்கிடையில், கடந்த இரண்டு வாரங்களாக நேட்டோ எல்லைக்குள் ரஷ்யர்களின் தொடர்ச்சியான ஊடுருவல்களுக்குப் பிறகு, நேட்டோ தனது சொந்த பாதுகாப்பை அதிகரித்து வருகிறது.
ஆனால், புடினும் அவரது ஆதரவாளர்களும் ஊடுருவல் சம்பவங்களில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கடுமையாக மறுத்து வருகின்றனர். அத்துடன், இன்னொரு உலகப் போருக்கு காரணமாகும் வகையில் பொய்யான தகவல்களை மேற்கத்திய நாடுகள் பரப்பி வருவதாகவும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
இதனிடையே, புடின் வெளியிட்டுள்ள அரசாணையில், ஏற்கனவே ரிசர்வ் பிரிவில் இல்லாத 18 முதல் 30 வயதுடைய அனைத்து மக்களும் இராணுவத்தில் பணியாற்ற அழைக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மக்கள் ரஷ்ய சட்டங்களுக்கு உட்பட்டவர்கள், குறிப்பாக 1998 இல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி அவர்கள் கட்டாய இராணுவ சேவைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.
கடந்த 2022 இலையுதிர்காலத்தில் முன்னெடுத்தது போன்று, தற்போதும் பொதுமக்களிடம் இராணுவத்தினரை அணிதிரட்ட ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan