2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் இடம் மாற்றம்.. ! டிரம்ப் எச்சரிக்கை
27 புரட்டாசி 2025 சனி 10:59 | பார்வைகள் : 2818
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உலக கோப்பை கால்பந்து போட்டிகளை பாதுகாப்பற்ற நகரங்களில் இருந்து இடமாற்றம் செய்ய இருப்பதாக எச்சரித்துள்ளார்.
2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் பாதுகாப்பற்ற நகரங்களாக தான் கருத்தும் இடங்களில் இருந்து 2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இடம் மாற்றி விடுவேன் என்று எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் அவர் அளித்த பேட்டியில், குறிப்பிட்ட மைதானமோ அல்லது நகரமோ 2026 FIFA உலகக் கோப்பைக்கு அல்லது 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சிறிதளவு ஆபத்து ஏற்படுத்தும் என்று கருதினால் போட்டியை அந்த நகரங்களில் இருந்து மாற்றி விடுவதாக எச்சரித்துள்ளார்.
மேலும், அப்படிப்பட்ட நிலை ஏற்படாது என தான் நம்புவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த எச்சரிக்கை சியாட்டில், நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய ஜனநாயக கட்சியினரால் நிர்வகிக்கப்படும் முக்கிய நகரங்களை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்த நகரங்களில் தான் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்பின் இந்த எச்சரிக்கைக்கு மத்தியில், 2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியை மாற்றுவதற்கான அதிகாரம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு உள்ளதா என்று தெளிவாக தெரிய வரவில்லை.
போட்டியை நடத்தும் FIFA கால்பந்து அமைப்பிற்கே போட்டி குறித்த முடிவை எடுக்கும் அதிகாரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan