Paristamil Navigation Paristamil advert login

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள டிவி பிரபலம் இவர்தானா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள டிவி பிரபலம் இவர்தானா?

24 புரட்டாசி 2025 புதன் 16:25 | பார்வைகள் : 480


தமிழில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது. இதனை முன்பு கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

சீசன் 8 இல் இருந்து நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 9 அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மற்றும் டிஜிட்டல் தளத்தில் ஜியோசினிமாவில் (JioCinema) 24/7 நேரலையாகவும் பார்க்கலாம்.

முந்தைய சீசன்களில் ஆரவ், ரித்விகா, முகேன் ராவ், ஆரி அர்ஜுனன், ராஜு ஜெயமோகன், முகமது அசீம், அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் முத்துக்குமரன் ஜெகதீசன் ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர்.

இந்த முறை புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதல் விறுவிறுப்பாக்கும் வகையில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த சீசனில் போட்டியாளர்களாக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, டிவி சீரியல் நடிகைகள் ஜனனி, பரினா ஆசாத் உள்ளிட்டோர் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.

இவர்கள் வரிசையில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சுநாதன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இடம்பெறுவார் என தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்