Paristamil Navigation Paristamil advert login

‘ஜனநாயகன்’ முதல் சிங்கிள் பாடல் தீபாவளிக்கு முன்பே ரிலீஸாகிறதா?

 ‘ஜனநாயகன்’ முதல் சிங்கிள் பாடல் தீபாவளிக்கு முன்பே ரிலீஸாகிறதா?

24 புரட்டாசி 2025 புதன் 16:25 | பார்வைகள் : 299


GOAT படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். அதனால் படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க முக்கிய வேடங்களில் மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் பெரும்பாலானக் காட்சிகள் சென்னை பனையூரில் உள்ள ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் முதல் பாடலான ‘one last dance’ பாடல் ரிலீஸாகும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி தீபாவளிக்கு முன்பாக அக்டோபர் முதல் வாரத்திலேயே அந்த பாடல் வெளியாகும் என சொல்லப்படுகிறது

வர்த்தக‌ விளம்பரங்கள்