Paristamil Navigation Paristamil advert login

ஒரு தமிழ்ப் படம் கூட ஆஸ்கர் தேர்வுக்கு இல்லையா ?

ஒரு தமிழ்ப் படம் கூட ஆஸ்கர் தேர்வுக்கு  இல்லையா ?

21 புரட்டாசி 2025 ஞாயிறு 12:54 | பார்வைகள் : 2383


தமிழ் சினிமாவில் தரமான படங்கள் வருவது கொஞ்சம் தடம் மாறித்தான் போய்விட்டது. படங்களின் எண்ணிக்கை அதிகமாக வரும் அளவுக்கு, படங்களின் தரம் அதிகமாகவில்லை. 2026ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியாவின் சார்பில் 'ஹோம்பவுண்ட்' ஹிந்தித் திரைப்படம் தேர்வாகி உள்ளது.

அந்தத் தேர்வுப் போட்டியில் மொத்தம் 24 இந்தியப் படங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், அவற்றில் ஒரு படம் கூட தமிழ்ப் படம் இல்லை என்பது வருத்தமான ஒரு தகவல். எந்த ஒரு தமிழ்ப் படமுமே அந்தத் தேர்வுக்குரிய தரத்தில் இல்லையோ என்பது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

'ஹோம்பவுண்ட்' படத்துடன் 'புஷ்பா 2, குபேரா' போன்ற தெலுங்குப் படங்கள் போட்டியிட்டதும் ஆச்சரியமளிப்பதாக உள்ளது.

ஆஸ்கர் தேர்வுக்கான கலந்து கொண்ட இந்தியத் திரைப்படங்கள்

ஹிந்தி

ஐ வான்ட் டூ டாக், டான்வி த கிரேட், த பெங்கால் பைல்ஸ், ஹோம்பவுண்ட், கேசரி சாப்டர் 2, யுமன்ஸ் இன் த லூப், ஜுக்னுமா, புலே, பைரே

தெலுங்கு

புஷ்பா 2, கண்ணப்பா, காந்தி தாத்தா செட்டு, குபேரா, சங்கராந்திகி ஒஸ்துனம்

மராத்தி

சூப்பர்பாய்ஸ் ஆப் மாலேகான், ஸ்தல், சாம்பார் போன்டா, தஷாவதார், வனவாஸ், பாணி, ஆடா தம்பாய்சா னாய்

கன்னடம்

வீர சந்திரஹாசா

மணிப்புரி

பூங்

மற்றும் 'மீடா த டாஸ்லிங் கேர்ள் (சைலண்ட் திரைப்படம்).

வர்த்தக‌ விளம்பரங்கள்