Hair Dye பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுமா?

18 புரட்டாசி 2025 வியாழன் 16:48 | பார்வைகள் : 1475
உலகம் முழுவதும் நரையை மறைக்க ஹேர் டை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ள நிலையில் அதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பல மக்களுக்கு நரைமுடி வயது முதிர்வை வெளிக்காட்டி மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் நரையை மறைக்க ஹேர் டை எனப்படும் தற்காலிக முடியை கருப்பாக்கும் கலவையை மக்கள் பூசிக் கொள்வது வழக்கமாகியுள்ளது. ஆனால் இது பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தும் என அமெரிக்காவை சேர்ந்த NIEHS என்ற National Institute of Environmental Health Sciences ஆய்வகம் எச்சரித்துள்ளது.
தலைமுடிக்கு ஹேர் டை பயன்படுத்தும் பெண்களில் 9 சதவீதத்தினருக்கு மார்பக புற்றுநோய் வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 முதல் 8 வாரங்களுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக Hair Straightening எனப்படும் முடியை நேராக்குதலை செய்யும் பெண்களுக்கு மார்பக புற்று நோய்க்கான வாய்ப்பு 30 சதவீதம் வரை உள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1