இலங்கையில் திருமண நிகழ்வுக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த கதி

19 ஐப்பசி 2025 ஞாயிறு 17:01 | பார்வைகள் : 190
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசாத்நகர் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த தம்பதியினர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் ஆசாத் நகர் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த காரானது வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது காரில் இருந்த எயார்பேக் வெளிவந்ததினால் காரில் பயணித்த தம்பதியினர் இருவரும் சிறு காணங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
சாரதியின் தூக்கமே விபத்துக்கான காரணமென தெரியவருகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.