பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார்?

19 ஐப்பசி 2025 ஞாயிறு 16:56 | பார்வைகள் : 791
பிக்பாஸ் 9வது சீசனின் பரபரப்பான இரண்டாவது வாரத்தில் இரண்டாவதாக ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பிக்பாஸ் சீசன்களை விட மிக மெதுவாக பரபரப்பை அடைந்து வருகிறது இந்த பிக்பாஸ் சீசன் 9. ஆரம்பத்தில் எதற்கு வந்திருக்கிறோம் என்பதே தெரியாதது போல முதல் வாரத்தை கழித்த ஹவுஸ்மேட்ஸுக்கு வார இறுதியில் விஜய் சேதுபதி விட்ட டோஸ் காரணமாக இரண்டாவது வாரம் கொஞ்சம் ஓகேவாக சென்றது.
இந்நிலையில் முதல் வாரத்தில் ப்ரவீன் காந்தி எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது வாரமும் ஒரு எலிமினேஷன் நடந்துள்ளது. எலிமினேஷனுக்கான நாமினேஷனில் கம்ருதீன், வாட்டர்மெலன் ஸ்டார், சபரிநாதன், பார்வதி, கெமி, ரம்யா ஜோ, எஃப் ஜே, அரோரா, அப்சரா உள்ளிட்டோட் உள்ளனர். இதில் கம்ருதீன் எலிமினேஷன் ப்ரீ பாஸை டாஸ்க்கில் வென்றதால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரை தவிர்த்து மீதம் உள்ளவர்களில் திருநங்கையான அப்சரா சிஜே வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. குமரி மாவட்டத்தை சேர்ந்த அப்சரா மாற்று பாலினத்தவர்கள் நலனுக்காக செயல்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.