Paristamil Navigation Paristamil advert login

செட்ஜிபிடிக்கு போட்டியாக களமிறங்கியுள்ள இந்திய செயலி

செட்ஜிபிடிக்கு போட்டியாக களமிறங்கியுள்ள இந்திய செயலி

18 ஐப்பசி 2025 சனி 07:36 | பார்வைகள் : 1041


ஏஐ (AI) சார்ந்து உலகமே மாறி வரும் இந்த வரலாற்று தருணத்தில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) செயலியின் பயன்பாடு வரலாற்றிலேயே முதன்மையான மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது.

கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டிலும் முதல் இடத்தைப் பிடித்து செட்ஜிபிடி, ஜெமினி போன்ற உலகப் பிரமாண்டங்களைப் பின்னுக்கு தள்ளி முதன்மை ஏஐ செயலியாக பெர்ப்ளெக்சிட்டி உயர்ந்துள்ளது.

இந்தியாவை சார்ந்த புதிய தலைமுறை செயற்கை நுண்ணறிவு சேவை பெரும் வெற்றி பெற்றிருப்பது பெருமையான தருணம் ஆகும்.

பெர்ப்ளெக்சிட்டி சாதாரண செட்போட் சேவையாக மட்டுமின்றி தேடல் (Search), உரையாடல் (Cha), மற்றும் உற்பத்தித் திறன் கருவிகளை ஒருங்கிணைக்கும் ஒரு செயலியாக இருக்கிறது.

மாணவர்கள், படைப்பாளர்கள், தொழில்முனைவோர், மற்றும் அலுவலக வல்லுநர்கள் ஆகியோருக்கு இது தினசரி வாழ்க்கையை மிகவும் எளிதாக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஏஐ செயலியின் மில்லியன் கணக்கான பதிவிறக்கங்கள் இதன் வெற்றியை எடுத்துக்காட்டுகின்றன.

தீபாவளி சீசனில் பெர்ப்ளெக்சிட்டியின் வெற்றி, இந்திய தொழில்நுட்பத் துறையின் பெருமையையும் உலக அரங்கில் அதன் வளர்ச்சியையும் பிரதிபலிக்கிறது. சமீப காலங்களில் இந்தியா சிறந்த கண்டுபிடிப்புகளை பயன்படுத்துவது மட்டுமில்லாமல் அவற்றை உருவாக்குவதிலும் முன்னணியில் உயர்ந்து நிற்கிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்