கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம் - பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
17 ஐப்பசி 2025 வெள்ளி 13:59 | பார்வைகள் : 3041
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள், தங்களது திட்டமிட்ட விமான புறப்படும் நேரத்திற்கு நான்கு (04) மணிநேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்குள் நுழைந்து பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்செயல்முறை, பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்கும் விமான நிலையத்தினுள் பயணிகள் போக்குவரத்தைச் சீராகச் செய்வதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், இந்த காலம் 3 மணி நேரத்திற்கு முன்னதாக காணப்பட்டது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan