பரிஸ் : வீதி விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி!!

17 ஐப்பசி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 1648
பரிசில் வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சென்ற 2024 ஆம் ஆண்டில் பரிசில் மட்டும் வீதி விபத்துக்களில் 433 பேர் உயிரிழந்துள்ளனர். முந்தைய 2023 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 27 பேர் குறைவாகும். உயிரிழந்தவர்களில் அதிகமானோர் பாதசாரிகளே ஆவர். சென்ற ஆண்டில் 148 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர்.
அத்தோடு இல்-து-பிரான்ஸ் மாகாணம் முழுவதிலும் சேர்த்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் 263 பேரும் 2023 ஆம் ஆண்டில் 241 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இத்தகவலை பரிஸ் நகரசபை வெளியிட்டுள்ளது.