மீண்டும் தெலுங்கு தயாரிப்பாளருடன் கைகோர்க்கும் அஜித்!

16 ஐப்பசி 2025 வியாழன் 13:26 | பார்வைகள் : 178
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் தற்போது கார் ரேஸிங்கில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை அஜித் கார் ரேஸிங்கில் ஈடுபடுவார் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் புதிய படம் உருவாகப்போவதாக ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது.
அதன்படி தற்காலிகமாக ஏகே 64 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் புதிய படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் ஆதிக், அப்டேட் கொடுத்திருந்தார். அடுத்தது இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 நவம்பர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2026 பிப்ரவரி மாதத்தில் இப்படம் தொடங்கும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு பிறகு அஜித் – ஆதிக் கூட்டணியிலான புதிய படத்தை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். இது தவிர நடிகர் அஜித், ஹனீப் அடேனி இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் அஜித், மீண்டும் தெலுங்கு தயாரிப்பாளருடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.மீண்டும் அதாவது ஏற்கனவே ‘குட் பேட் அக்லி’ படத்திற்காக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் அஜித் கூட்டணி அமைத்திருந்த நிலையில், அடுத்தது வேறொரு புதிய படத்திற்காக நடிகர் அஜித், ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் இணைய இருக்கிறாராம். இவர்களது புதிய படம் 2026-இல் நடக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.