Paristamil Navigation Paristamil advert login

‘ஜனநாயகன்’ படக் கதை தெரியுமா..?

 ‘ஜனநாயகன்’ படக் கதை தெரியுமா..?

16 ஐப்பசி 2025 வியாழன் 12:26 | பார்வைகள் : 185


விஜய் நடிப்பில் உருவாகும் அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் படம் ஜனநாயகன். விஜயின் 69வது படமான ஜனநாயகன் அவரது கடைசி படம் என்றும் கூறப்படுகிறது. காரணம் அவரது அரசியல் வருகை.

போலீஸ் கேரக்டரில் வரும் அதன் பின்னர் அரசியல்வாதி, முதல்வராவதுதான் கதை என்று கூறப்படுகிறது. 2026 ஜனவரி 9-ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு முன் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு இருக்கிறார்கள். விஜய் அரசியலுக்குள் நுழைந்திருப்பதாலும், ஜனநாயகன் என பெயரிட்டு இருப்பதாலும் இப்படத்தின் கதை என்ன என்பது பலத்த எதிர்பார்ப்புகளை கிளப்பி இருக்கிறது.

இந்நிலையில், 1997ம் ஆண்டு மலையாள சூப்பர் ஸ்டார் சுரேஷ் கோபி நடித்த ஜனாதிபதியம் கதை தான் விஜய் நடிக்கும் ஜனநாயகன் என்கிறார்கள். ஜனாதிபதியம் ஒரு அரசியல் சட்டையர் பாணியில் உருவாக்கப்பட்டது. மலையாள நடிகர் சுரேஷ் கோபி முக்கிய கதாபாத்திரத்தில் நடிதிருந்தார். கதை, ஒரு சாதாரண மனிதனை மையமாக வைத்து, அவன் எப்படி அரசியல், சமூக அநீதிகளுக்கு எதிராக போராடுகிறான் என்பதைப் பற்றியது. இந்தப் படம், அரசியல் ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகம், சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளை விமர்சிக்கும் வகையில் அமைந்திருந்தது.சுரேஷ் கோபி ஒரு நேர்மையான, தைரியமான காவல்துறை அதிகாரியாக வாழ்ந்து, மக்களுக்காக போராடும் ஒரு தலைவனாக உருவெடுப்பார். மக்களின் ஆதரவுடன் ஒரு மாற்றத்தை உருவாக்க முயன்று முதல்வர் பதவியை அடைவதுதான் கதை.

அதாவது, கேரள மாநிலத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெறுவதுடன் அந்தப்படம் படம் தொடங்கும். ஆனால் முதலமைச்சர் வேட்பாளர் தேர்தலில் தோல்வியடைந்துவிடுவார். கட்சித் தலைவர் ராமதேவன், நாயனார் என்ற ஆர்.டி. நாயனார் என்ற முன்னாள் கேரள கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி கேரக்டரில் வரும் சுரேஷ் கோபியின் பெயரை முன்மொழிகிறார். அவர் காவல்துறையில் உள்ள சில வில்லன்களின் சதிகளால் பணியில் இருந்து ராஜினாமா செய்து விட்டு கொல்கத்தாவில் ஒதுங்கி வசிக்கிறார்.

ஆர்.டி. நாயனார் (சுரேஷ்கோபி) கல்கத்தாவில் இருந்து கேரளாவுக்குத் திரும்பி முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார். அதன் பிறகு தனது மனைவி இந்திரா ஐ.ஏ.எஸ். காவல்துறையில் உள்ள தனது முன்னாள் சகாக்களின் உதவியுடன் தனது எதிரிகளை வீழ்த்த தனது அதிகாரங்களைப் பயன்படுத்துகிறார். முதல்வராகி மக்களுக்கு சேவை செய்கிறார். இந்தப்படத்தின் கதைதான் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படம் என்கிறார்கள். இதில் விஜயும் காவதுறை அதிகாரியாக வந்து பிறகு முதல்வர் பதவியில் அமர்வதுதான் கதை.

இந்நிலையில் பத்திரிகையாளராக இருந்து அரசியல் விமர்சகராக மாறியுள்ள உமாமதி ஜனநாயகன் கதை இதுதான் எனத் ஒரு நோட் கொடுத்துள்ளார். அவர் ஜனநாயகன் படத்தின் கதை குறித்து, ‘‘விஜய் ஜனநாயகன் படத்தில் சாதாரண மனிதனாக இருப்பார். காவல்துறை அதிகாரியாக இருக்கும் அவருக்கு பல சிக்கல்கள் வருகிறது. அதையும் தாண்டி மக்களுக்காக செய்ய வேண்டும் நினைப்பார். ஆனால் அவரை எதிர்கள் வளரவிட மாட்டார்கள். அவர் வளரக்கூடாது என நினைக்கும் பல சக்திகள் இவரை போட்டு அமுக்கி, கொன்றுவிடத் துடிக்கும். அப்போதெல்லாம் இவர் எதையும் சட்டை செய்ய மாட்டார். ஆனால் மக்கள் மேல் அந்த கூட்டம் கை வைக்க முயற்சிக்கும்.

உடனே இவர் மக்களுக்காக களமிறங்கி ஜனநாயகத்தை நிலைநாட்டி, மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இவரை ஆட்சிப் பொறுப்பில் அமர வைத்து முதல்வர் ஆக்கி விடுவார்கள். இதுதான் படக்கதை. கடைசியில் ஒரு கையை தூக்கிக் கொண்டு நிற்பார். முதல் கையெழுத்து நீட் விலக்கு என்று கையெழுத்து போடுவார். கையெழுத்து போட்ட உடனே மக்கள் கொண்டாடுவார்கள். தலைவனை தேர்ந்தெடுத்து விட்டோம் என ஒரு பாட்டு. அந்த பாட்டுக்காக தான் கரூரில் நடந்த பரப்புரையில் அந்த சீன் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த பிரச்சினையால் அந்த கரூரில் எடுக்கப்பட்ட காட்சிகள் வராது என்கிறார்கள். விஜய் பிடிவாதக்காரர். அந்த காட்சிகள் வர வேண்டும். எவன் என்ன செய்து விடுவான் என அடம்பிடிப்பார். அந்த காட்சிகள் இடம் பெற வாய்ப்புள்ளது’’ என்கிறார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்