இலங்கை, இந்தியாவில் 2026 உலகக்கிண்ணம்: தகுதிபெற்ற ஓமன், நேபாளம்

16 ஐப்பசி 2025 வியாழன் 11:46 | பார்வைகள் : 125
இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கிண்ணத் தொடரில் விளையாட நேபாளம், ஓமன் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
அடுத்த ஆண்டு டி20 உலகக்கிண்ணத் தொடர் இலங்கை, இந்தியா நாடுகளில் நடைபெற உள்ளது. இதில் விளையாட ஓமன், நேபாளம் அணிகள் தகுதிபெற்றுள்ளன. அவர்களுடன் மேலும் ஒரு அணி சேரும்.
சந்தீப் லாமிச்சேன் (Sandeep Lamichhane) நேபாள அணி தகுதி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவர் 4 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதேபோல் ஓமன் அணியின் முன்னேற்றத்திற்கு ஜிதன் ராமானந்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி காரணமாக அமைந்தார்.
ஐக்கிய அரபு அமீரகம் அடுத்ததாக ஜப்பானை எதிர்கொள்கிறது. இது அமீரக அணி தகுதி பெற முக்கியமான போட்டியாகும்.