இனி ஐபோனை பாஸ்போர்ட்டாக பயன்படுத்தலாம் - எந்த நாட்டில் தெரியுமா?

16 ஐப்பசி 2025 வியாழன் 11:46 | பார்வைகள் : 417
பொதுவாக விமான பயணம் என்றாலே பாஸ்போர்ட்டை அனைவரும் தவறாமல் எடுத்து செல்வார்கள்.
தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், அந்த தேவையை அவசியமற்றதாக்குகிறது.
பயனர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை போனில் உள்ள வாலெட் செயலியில் சேமித்து வைக்கும் வசதியை ஐபோன் வழங்க உள்ளது.
இதன் மூலம், விமான நிலைய சோதனைகளின் போது பாஸ்போர்ட்க்கு பதிலாக ஐபோனில் உள்ள டிஜிட்டல் பாஸ்போர்ட்டை காட்டிக்கொள்ளலாம்.
இந்த டிஜிட்டல் பாஸ்போர்ட்டை, அந்த பயனர் பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் மட்டுமே திறக்க முடியும்.
அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே இந்த சேவை தற்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த டிஜிட்டல் பாஸ்போர்ட்டை அமெரிக்காவில் உள்ள உள்நாட்டு பயணங்களின் போது மட்டுமே விமான நிலைய சோதனையின் போது அடையாள ஆவணமாக பயன்படுத்த முடியும்.
சர்வதேச பயணங்களுக்கு எல்லை தாண்டும் போது, வழக்கமான பாஸ்போர்ட் அவசியமாகிறது.
IOS 26 அப்டேட்டில் இந்த அம்சம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிற வெளிநாட்டு பயனர்களுக்கு இந்த அம்சம் தற்போது கிடைக்காவிட்டாலும், இது பயன்பாட்டிற்கு வரும் போது, உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.