உலக வர்த்தக அமைப்பில் இந்தியா மீது சீனா புகார்

16 ஐப்பசி 2025 வியாழன் 14:35 | பார்வைகள் : 161
இந்தியாவின் மின்சார வாகனங்கள், பேட்டரிக்கு வழங்கப்படும் மானியங்களால், தங்கள் நாட்டின் பொருளாதார நலன் பாதிப்பதாக, உலக வர்த்தக அமைப்பில், சீனா புகார் தெரிவித்துள்ளது.
சீன வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
இந்திய அரசின் மின்சார வாகன, பேட்டரி மானியங்கள், நியாயமற்ற போட்டியில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை இந்திய நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. இறக்குமதிக்கு மாற்றாக உள்ள இவை, உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறுவதாக உள்ளன. தவறுகளை இந்தியா சரி செய்ய வேண்டும். மேலும், சீன உள்நாட்டு வர்த்தகத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.