இரு பிரெஞ்சு நபர்களுக்கு ஈரானில் சிறை!!
14 ஐப்பசி 2025 செவ்வாய் 21:55 | பார்வைகள் : 1021
இரு பிரெஞ்சு நபர்கள் ஈரானில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். ஈரானின் தேசிய பாதுகாப்புக்கு அவர்கள் அச்சுறுத்தலாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இருவரும் இஸ்ரேலுக்காக உளவு வேலைகளில் ஈடுபட்டு, தகவல்கள் சேகரித்ததாகவும், இருவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவருக்கு ஐந்து மற்றும் இரண்டாவது நபருக்கு ஆறு ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக பிரெஞ்சு வெளியுறவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இருந்தபோதும், இருவர் குறித்த மேலதிக தகவல்களை ஈரான் வெளியிட மறுத்துள்ளது.
முன்னதாக Cécile Kohler மற்றும் Jacques Paris எனும் இருபிரெஞ்சு நபர்கள் ஈரானில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களும், மேற்குறித்த இருவரும் ஒன்றா இல்லையா என்பது தொடர்பில் பதில் தர வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan