AI வளர்ச்சியால் அதிகரிக்க உள்ள மின் கட்டணம் - ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை

14 ஐப்பசி 2025 செவ்வாய் 17:31 | பார்வைகள் : 143
AI பயன்பாட்டால் இந்தியா எதிர்கொள்ள உள்ள பிரச்சினை குறித்து ஸ்ரீதர் வேம்பு எச்சரித்துள்ளார்.
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு நாளுக்கு நாள் ஒவ்வொரு துறைகளிலும் அதிகரித்து வருகிறது.
AI வருகையால் பல துறைகளில் வேலை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என பலரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளையில், AI யால் இந்தியா மற்றொரு முக்கிய பிரச்சினையை எதிர்கொள்ள உள்ளதாக Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள ஏதென்ஸ் நகரை சேர்ந்த நபர் ஒருவர், "2023 ஆம் ஆண்டு முதல் 6 முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டு, 60% அதிகரித்துள்ளது.
தற்போது இந்த பகுதியில் புதிதாக 20 டேட்டா மையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 99% மக்களின் வாழ்க்கை தரம் சரிந்துள்ளது" என எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவை பகிர்ந்துள்ள ஸ்ரீதர் வேம்பு, "ஏதென்ஸில் டேட்டா மையங்களின் மின்சார தேவை காரணமாக 2023 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை மின் கட்டணம் 60% ஆக உயர்ந்துள்ளது.
நாம் அனைவரும் AI தொழில்நுட்பம் பற்றி பேசினாலும், அதற்கு தேவைப்படும் மின்சாரம் குறித்து பேசுவதில்லை. இது இந்தியாவிற்கு பாரிய பிரச்சினை.
நம்மால் அனைத்து GPUவையும் வாங்க முடிந்தால் கூட, அதற்கான மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியாது. AIயின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக நம் வீடு மற்றும் தொழிற்சாலைகளை கைவிட முடியாது.
ஏஐயின் கணக்கீட்டு அம்சத்தின் அடிப்படையே நாம் மறுபரிசீலனை செய்யும் நேரம் வந்துவிட்டதாக நான் நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.